குபா விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பைஸால் அணி சம்பியன்

1383219_438871126219317_1823335971_n[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற 10ஓவர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடி பைஸால் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி இலாஹிஸ் விளையாட்டுக் கழகமும் பைஸால் விளையாட்டுக்கழகமும் மோதியது.

இப்போட்டியில்  காத்தான்குடி பைஸால் அணி 110ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலாஹிஸ் அணி 90ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.மேலதிக 20ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இப்போட்டியில் பைஸால் அணியைச் சேர்ந்த சியாம் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் தொடர் ஆட்ட நாயகனாக இலாஹிஸ் அணியைச் சேர்ந்த தில்ஸாத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சுஜாத்,காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டுக் கழக தலைவர் முஹம்மட் சபீர் மற்றும் உறுப்பினர்கள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1380613_438870479552715_326452843_n[1]

1385198_438870352886061_1210083072_n[1]

1385252_438871276219302_1358520426_n[1]

1383219_438871126219317_1823335971_n[1]

Published by

Leave a comment