காத்தான்குடி: சமூகப் பணிகளையும் மனிதாபிமானப் பணிகளையும் இஸ்லாம் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நோக்குகிறது என காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலைய செயலாளர் அஷ்ஷெய்க் அஸ்பர் ஹஸன் (பலாஹி) தெரிவித்தார்.
காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த சனிக்கிழமை மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் இடம்பெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நல்ல விடயங்களில் உதவி ஒத்தாசையாக இருங்கள் என்ற அல்குர்ஆனிய வசனத்திற்கேற்ப இன,மத,நிற வேறுபாடுகளுக்கு அப்பால் எதெல்லாம் நல்ல காரியங்களாக இருக்குதோ அவற்றில் நீங்கள் ஈடுபடுங்கள் என்று இஸ்லாம் கூறுவதை விளங்கிக் கொள்ள முடியும்.
அது மாத்திரமல்ல யார் ஒருவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் முழு மனித சமூகத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற குர்ஆனிய வசனத்திற்கேற்ப நாம் வழங்குகின்ற இரத்தங்கள் ஒருவரை வாழ வைத்தாலும் இஸ்லாம் அதை முழு மனித சமூகத்தையும் வாழ வைத்ததைப் போன்று கருதுகிறது.
ஆகவே இஸ்லாம் பொதுப் பணிகள்,சமூகப் பணிகள் என்பவற்றை எவ்வித பாகுபாடுமின்றி வரவேற்கின்றது.
இஸ்லாம் இவ்வாறான மனித நேய செயற்பாடுகளுக்கு ஆன்மீக பெறுமானங்களை வழங்குகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a comment