காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தினூடாக முன்று வீதிகள், நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. ஹுசைனியா பள்ளிவாயல் நிறுவாக சபை உறுப்பினர் எஸ்.கே.கலீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்முன்று வீதிகளையும் திறந்துவைத்தார்.
காத்தான்குடி அல்-அக்ஸா வீதி, காத்தான்குடி 1, எம்.பீ.சி.எஸ் வீதி, ஹுசைனியா வீதி ஆகிய 3 வீதிகள் திறந்து வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் வெள்ள அணர்த்தத்தின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட இவ்வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக பொதுமக்கள் தேவை கருதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் ஊரினுடைய முக்கயஸ்தர்கள் உயர் அதிகாரிகள், உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment