ஷாங்காய்: ஐபோன் வாங்குவதற்காக தனது மூன்றாவது மகளை பெற்றோரே விற்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்தேறியுள்ளது. அப்பிள் ஐபோன் வாங்கும் ஆசையில் கடந்தாண்டு சீன இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களை விற்று அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், சீனத் தம்பதி ஒன்று தற்போது அப்பிள் ஐபோன் வாங்குவதற்காக தங்களது சொந்த மகளையே விற்றுள்ளனர்.சமீபத்தில் சீன தம்பதி ஒன்று அவர்களது மூன்றாவது மகளின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, சிறுமியை தத்தெடுக்க விரும்புவோர் அவர்களை தொடர்பு கொள்ளலாமென தெரிவித்திருந்தனர்.
அத்தம்பதி, சிறுமியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் அப்பிள் ஐ ஃபோன் மற்றும் உயர்தர காலணிகளை வாங்கியதாக தெரிகிறது. தகவல் அறிந்த மனித உரிமை அமைப்பினர் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குக் குறித்து அத்தம்பதிகள் கூறியதாவது, ‘
எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது மகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. அதனால் அவளது வாழ்க்கை நல்ல விதமாக அமையத்தான் நாங்கள் அவளை தத்துக்கொடுத்தோம் என விளக்கமளித்துள்ளனர்.
![iPhone-camera[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/iphone-camera1.jpg?w=150&h=91)
Leave a comment