கிண்ணியா: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் நாடு அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் திவிநெகும வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்ட ஆரம்பநிகழ்வு அருந்தவசெல்வன் தலைமையில் மாலிந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் 5 ஆம் கட்ட திவிநெகும வேலைத்திட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு ஜே.பி சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பாயிஸ், ஈடீஓ எம்.றிசானா, எஸ்.டி.ஓ எம்.பாயிஸ் அலி இவர்களுடன் முக்கிய பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


Leave a comment