காத்தான்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 28வயது வாலிபர் ஒருவர் சடலமாக மீட்பு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி டெலிகொம் வீதியின் எப்.சீ உள்ளக வீதி வாச்சர் லேனிலுள்ள ஐந்தாவது ஒழுங்கையில் 28 வயதான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முஹம்மட் சித்தீக் பெனடிக் (வயது 28) என்பவரே தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட தகறாரின் காரணமாகவே குறித்த நபர் தூக்கிலிட்டுள்ளார்.

இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான முஹம்மட் சித்தீக் பெனடிக் என்பவர் அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாகக்கொண்டவர் என்பதுடன் சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment