கண்டி குண்டசாலை பிரதேசத்தில் கஞ்சா மீட்பு

weedகண்டி: கண்டி குண்டசாலை பிரதேசத்தில் இரண்டு கிலோ கஞ்சா போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். குண்டசாலை நத்தரன்பொத்த பிரதேசத்தில் பலகொல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது செலூன் ஒன்றில் வைத்து இக் கஞ்சா போதைப் பொருள் அடங்கிய பொதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கண்டி குண்டசாலை திகன மெனிக்ஹின்ன , கென்கல்ல ,பல்லேகலை போன்ற பிரதேசங்களுக்கு கஞ்சாவை நீண்ட காலமாக வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் இப் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

VK

Published by

Leave a comment