மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2012,2013 ஆண்டுகளுக்கான தமிழியல் விருது விழா மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரி கவிஞர் எருவில் மூர்த்தி அரங்கில் நேற்று (20.10.2013) ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி. ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெற்றது.
குறித்த தமிழியல் விருது விழாவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மண்முனை மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுனர் டாக்டர் பி.யோகானந்,இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச.கருணாநிதி,எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய்யத்தின் மேலாளர் கலாநிதி ஓ.கே.குணநாதன் உட்பட எழுத்தளர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது மூத்த படைப்பாளி இனிய அன்புமணி இரா நாகலிங்கத்திற்கு வழங்கப்பட்டதுடன் தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச.கருணாநிதிக்கும் வழங்கப்பட்டது.
அத்தோடு பல்வேறு கலை இலக்கியம், ஓவியம் சிறந்த நூல் போன்றவைகளுக்கான விருதுகளும் பணமும் இதன் போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் இலக்கிய போட்டி அதன் பணிப்பாளர் பொன் செல்வநாயகத்தினால் ஆசிரியைக்கு வழங்கி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சிறுகதை, நாவல், கவிதை, சிறுவர் இலக்கியம், நாடகம், ஆவணமாக்கல், சமயம், வரலாறு, ஆய்வு, மொழிபெயர்ப்பு,இனநல்லுறவு, ஓவியம், பதிப்பு ஆகிய துறைகளிலலும் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் உட்பட 60 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Leave a comment