42 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் சதுக்கத்தில்

DSC07735 (Copy)Shums M/U

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ தாஜுல் மில்லத், அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. MP அவர்களினால் முன்மொழியப்பட்டு, தேசத்திற்கு மகுடம் – 2013 மற்றும் ஜெய்கா திட்டத்தின் கீழ் சுமார் 42 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் 19.10.2013 சனிக்கிழமை மாலை மக்கள் பாவனைக்காக காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் சதுக்கத்தில்   திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு பதில் நகர முதல்வர் கௌரவ அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. ஜாமியுழ்ழாபிரீன் உள்ளக வீதிகள், அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தை உள்ளக வீதிகள், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் உள்ளக வீதிகள் ( பேரவை வீதி ), DR. அஹமட் பரீட் மாவத்தை (வடிகாணுடன் கூடியது), நாகையடி அவ்லியா வீதி (வடிகாணுடன் கூடியது), அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தை (வடிகாணுடன் கூடியது) ஆகிய வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மிக விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கைக்குரிய செய்குனா அல்ஹாஜ் A. J. அப்துல் ரஊப் மிஸ்பாஹி (பஹ்ஜி) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஊர்ப் பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment