காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான்(மதனி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் யூனானி வைத்தியருமான அஷ்அஷய்க் எஸ்.எம்.ரயீஸுத்தீன் ஷறயி,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவரும் காதி நீதிபதியுமான மௌலவி அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலா ஆயட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி), மருதமுனை தாறுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.முபாறக்(மதனி),முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன், மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுல் ஆப்தீன்(மதனி) மற்றும் நகர சபை உறுப்பினர்கள்,சட்டத்தரணிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு நிகழ்வின் விஷேட உரையை கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் யூனானி வைத்தியருமான அஷ்அஷய்க் எஸ்.எம்.ரயீஸுத்தீன் ஷறயி நிகழ்த்தினார்.
இதன் போது குறித்த கல்லூரிக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் மாணவிகளின் நிகழ்ச்சிகள்,அதிதிகள் உரை என்பன இடம்பெற்றது.
குறித்த மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி சமூகத்தில் சிறந்த மார்க்கமுள்ள பெண்களை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![DM-7[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dm-71.jpg?w=150&h=112)

![DM-5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dm-51.jpg?w=780&h=585)
![DM-6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dm-61.jpg?w=780&h=585)
![DM-7[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dm-71.jpg?w=780&h=585)
Leave a comment