கொழும்பு: கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கால நிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்கிணங்க இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் அளவு 100 மில்லி மீற்றர் வரை அதிகரிக்கலாமெனவும் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி எச்சரித்துள்ளார். அதிக மழையின் போது பலத்த காற்று வீசும் அதேநேரம், இக்காலப் பகுதியில் மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆகையினால், பொது மக் கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
இதேவேளை, கடலிலும் அதிக மழையும் காற்றும் காணப்படும். கடலில் தென்மேற்கு திசையாக வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக் கும். ஆகையினால் கடலுக்குச் செல் வோர் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்.
– தினகரன்
Leave a comment