அரோவ்ஹீட்: அமெரிக்க கால்பந்தாட்ட அணிகளிலொன்றான கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ்- அணியின் ரசிகர்களே ‘திறந்தவெளி மைதானமொன்றில் எழுப்பப்பட்ட மிகப் பெரிய ஆரவார கோசத்துக்குச் சொந்தக்காரர்கள்’ என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள்.
நேற்று ஞாயிறன்று நடந்த போட்டியில் தமது ஆணிக்கு பலத்த கோசத்துடன் ஆரவாரம் எழுப்பி கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ் அணியின் ரசிகர்கள் சாதனை படைத்தனர்.
அரோவ்ஹீட் மைதானத்தில் நடந்த போட்டியின் இறுதிக் கட்டத்தின்போது கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ் அணியின் ரசிகர்கள் 137.5 டெசிபல்கள் வரை சத்தத்தை எழுப்பி சாதனை நிலைநாட்டியதாக கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னர் படைக்கப்பட்டிருந்த சாதனையை விட ஒரு டெசிபல் மேலே சென்று இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
வலியை ஏற்படுத்தக்கூடிய டெசிபல் அளவுகோலை விட சற்றுதான் இந்த சாதனை கோசம் குறைவாக பதிவாகியுள்ளது.
‘அது மிகப் பெரிய சத்தமாக இருந்தது. பூமியே அதிரும்படியாக இருந்தது’ என்றார் கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்.
– BBC Tamil

Leave a comment