சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பினால் வறிய மக்களுக்கான உழுஹிய்யா வழங்கும் நிகழ்வு

P1010552பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பினால் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வரும் விஷேட தேவையுடையோர்; மற்றும் வறிய மக்களுக்கான உழுஹிய்யா வழங்கும் நிகழ்வு அமைப்பினது தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இன்று சனிக்கிழமை காலை அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி), புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் பிரதம பேஷ்இமாம் ஆதம் லெவ்வை (பலாஹி), கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான மௌலவி முஸ்தபா (பலாஹி), 167சீ பிரதேச கிராம உத்தியோகத்தர் றஊப், ,பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் முன்னாள் தலைவர் மஹ்றூப் மற்றும் அமைப்பினது பொருளாளர். தாஹிர் ஜே.பி, இணைச்செயலாளர்மௌலவி மஸூத் அஹமத் (ஹாஸிமி) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 

 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment