கல்லடி: கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் ஜீ. ஐ. இஸட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் ‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வு நேற்று மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூவின மாணவர்களையும் ஒண்றிணைத்து சமயங்களுக்கிடையில் சமாதானம், பல்சமய மாணவர்கள் தத்தமது கலாசார விழுமியங்களை பரிமாற்றிக் கொள்ளல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வதிவிட செயலமர்வு நடாத்தப்படுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் சுனில் குணதிலக்க, மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ், ஜீ. ஐ. இஸட் நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஆலோசகர் டீ. சுப்பிரமணியம்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக அம்பாறை விஜயபுர வித்தியாலயம்,அம்பாறை சியம்பலாவௌ வித்தியாலயம், ஒலுவில் ஜாயிஷா வித்தியாலயம், மட்டு கிரான் விநாயகர் வித்தியாலயம், தாழங்குடா விநாயகர் வித்தியாலயம், சிவாநந்தா வித்தியாலயம், கல்லடி விவேகானந்தா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment