காத்தான்குடியில் நெனசல இலத்திரனியல் அறிவக நிலைய திறப்பு விழா

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் நெனசல அறிவக திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நெனசல இலத்திரனியல் அறிவக நிலைய திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் காரியாலயத்தில் நடைபெற்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு நெனசல இலத்திரனியல் அறிவக நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நெசனல இலத்தரனியல் அறிவகத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எல்.அமீர் பாறூக்,’.ல.முகா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டு மாவட்ட கிளைத் தலைவர் டீ.வசந்தராசா, செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை செயலாளர் சுல்மி, தொண்டர் இணைப்பாளர் சலீம், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் மற்றும் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

‘உலக அறிவு கிராமத்திற்கு’ எனும் குறிக்கோளில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறித்த நெசனல அறிவகம் ஏலவே திறக்கப்பட்டு முறையாக இயங்காமையினால் கைவிடப்பட்டு மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment