காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளரும், சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவருமான இல்மி அஹமட் லெவ்வையின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ .ல.மு.கா தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் காத்தான்குடி 167சீ கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. றவூப் மற்றும் அல்ஹாஜ் ஏ.எல்.ஜௌபர் ஆகியோர் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இரவு சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வையினால் இரண்டு பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஓ.எஸ்.ஏ .அமைப்பின் பொருளாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.தாஹிர் ஜே.பி, அவ் அமைப்பின் பிரதிநிதிகளான மௌலவி பௌசுர் அமீன் (ஜமாலி), முஸம்மில் ஜே.பி, அல்ஹாஜ்.ஹூஸையின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment