மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணி மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கான்பது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு கச்சேரியில் நேற்று இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற காணி மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பன பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவினூடாக இனஇமதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு சுமுகமான பேச்சுவார்த்தை முலம் தீர்வு கான்பதன இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காணி மற்றும் எல்லை நிர்ணயத்திற்கு பொறுப்பான மாவட்ட பணிப்பாளர் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment