பிரயாணிகளுக்கு சரியான நேரத்தை காட்டத்தவரும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையக் கடிகாரம் எந்த நேரத்திலும் 7.20 மணி நேரம் என்று காட்சியளிக்கின்றது

DSC02092பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரம் நிறுத்தி வைக்கப்படும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் பிராயாணிகளுக்கு எந்த நேரத்திலும் 7.20 மணி நேரம் என்று பிழையாக நேரம் காட்டுவதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான குறித்த மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் செயலிழந்து காணப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமேன தூர இடங்களில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் பிரயாணிகளும், சுற்றுலா பிரயாணிகளும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் கொழும்பு, பொலன்னறுவை, பானந்துறை, பதுளை, யாழப்பாணம், வவுனியா, புத்தளம், காலி,கண்டி,கல்முனை,அக்கறைப்பற்று,மூதூர்,திருகோணாமலை,அம்பாறை,பொத்துவில், களுவாஞ்சி;குடி, ஏறாவூர்,வாழைச்சேனை,ஆகிய தூர இடங்களுக்கு செல்லும் பிரயானிகள் வருவதால் சரியான நேரத்தை காட்டத்தவரும் இக் கடிகாரம் பிரயானிகளின் நன்மைகருதி உடனடியாக செயற்படுவதற்கு சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  

DSC02087

Published by

Leave a comment