அதிவேகப் பாதையை பொது மக்கள் பார்வையிட அனுமதி

colomboகொழும்பு: இம்மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ள கட்டுநாயக்க – கொழும்பு அதிவேகப் பாதையைப் பார்வையிட பொது மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதி உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் நிர்மணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேகப் பாதையை பொதுமக்கள் இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25.8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த அதிவேகப் பாதை களணி பாலத்தில் இருந்த அரம்பித்து கட்டுநாயக்க விமான நிலைய கனடா நட்புறவு வீதி நுழைவாயிலில் முடிவடைகின்றது.

6 மற்றும் 4 வழிப்பாதைகளைக் கொண்ட இந்த அதிவேகப்பாதை 33.5  மீற்றர் முதல் 26.0 மீற்றர் வரை அகலம் கொண்டது. மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனங்களில் பயணிக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு இணங்க பொது மக்கள் அதிவேப்பாதையில் இறங்கிப் பார்வையிடவும் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment