காத்தான்குடி: தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு 16-10-2013 புதன்கிழமை காலை கா-குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பொருளாளர் மௌலவி ஏ .எல்.எம்.இப்ராஹீம் பலாஹியின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின், செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹியினால் சுமார் 150க்கு மேற்பட்ட சம்மேளன உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கா-குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பொருளாளர் மௌலவி ஏ .எல்.எம்.இப்ராஹீம் (பலாஹி), உப செயலாளர் மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி), அதன் சிரேஷ்ட உறுப்பினர் எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) உட்பட அதில் அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment