பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்

hizbullahபழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இரன்டு வார காலத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொன்டு நேற்று செவ்வாய்க்கிழமை வெளிநாடு சென்றுள்ளதாலேயே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இரண்டு வார காலத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு அமைச்சினுடைய சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடமை புரிவார் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

Published by

Leave a comment