தென் மாகாணம்- மாத்தறை வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை

001 (2)பழுலுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: தென் மாகாணம் மாத்தறை மாவட்டம் வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை வெலிகம அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பெருநாள் தொழுகைகள் திறந்த வெளியில்தான் இடம்பெற வேண்டும் என்ற நபிவழிக்கமைவாக இடம்பெற்ற இப்பெருநாள் தொழுகையில் தொழுகையையும் பிரசங்கத்தையும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம்.அதாஉல்லாஹ் பஹ்ஜி நிகழ்த்தினார்.

இதன்போது உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பெருமளவிலான ஆண்கள், பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment