காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு

L1110678பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 16.10.2013 புதன்கிழமை காலை 6.10 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வழமையாக ஏற்பாடு செய்து வரும் இந்தத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் தமாம் இஸ்லாமிய கலாச்சார நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க். முஹம்மது முன்சூர் (மதனி) நிகழ்த்தினார்.

இத்திடல் தொழுகையில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,காத்தான்குடி நகர சபை பதில் தவிசாளர் ஜெஸீம்,உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊர்பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர். காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் இத்திடல் தொழுகையில் ஆண் பெண் கலப்பில்லாதவாறு ஒழுங்குகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment