புத்தளம்: இரண்டு பெண்கள் மீது கத்தியால் குத்தியும், அடித்து உதைத்தும் காயமேற்படுத்தியதாகச் சொல்லப்படும் மற்றொரு பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரம்பியடி சின்னநாகவில்லு எனும் பிரதேசத்திலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சந்தேக நபரான பெண் முதலில் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவரின் வீட்டுக்கு வந்து அப்பெண்ணை கையாலும் காலினாலும் தாக்கிவிட்டு அவளது கையிலிருந்த கத்தியாலும் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பெண் சத்தமிட்டு கத்துவதைக் கேட்ட மற்றைய தாக்குதலுக்குள்ளான பெண் அங்கு வந்து தாக்கிய பெண்ணைத் தடுக்க முயன்ற போதும் அப்பெண்ணையும் சந்தேக நபர் தாக்கியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் இருவருக்கிடையில் இருந்து வந்த பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
VK-
Leave a comment