காத்தான்குடி: வறுமைக்கும் வாழ்வளிப்போம் என்பதை உனர்த்தி நிற்கும் பெருநாள் ஈகை ஹஜ்ஜுப் பெருநாளாகும் என சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார். ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலர்ந்திருக்கும் தியாகத்திருநாளாம் பனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை அறிவிப்பதில் ஆனந்தம் அடைகின்றோம்.இப் பெருநாளைப் பொறுத்தவரையில் முழுமையான தியாகத்தையும்,விட்டுக்கொடுப்பையும் அதே நேரத்தில் ஒற்றுமையையும் அடிப்படையாகக்கொண்டு ஆண்டுதோறும் உலக இஸ்லாமியர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அத்தோடு அழ்ழாஹ்வினுடைய அடிபணிதலையும் அவனது ஏற்றுக் கொள்ளலையும் மாத்திரம் இலக்காக ஏற்று பொருளாதாரம் உடல்நலம் குடும்பங்கள் இவைகள் அனைத்தையும் தியாகித்து இலச்சோப இலட்ச ஹாஜிகள் புனித கஃ;பாவில் புனித ஹஜ்கடமையை நிறைவெற்ற ஒன்று கூடுவது அனைவரையுமே மெய்சிலிர்கவைக்கும்; முன்னோடியான முகப்புகளாகும்.
எனவே இத்தருணத்தில் நமது சமூகத்தில் அழ்ழாஹ்வினுடைய ஏற்பாட்டின் பிரகாரம் சிலர் ஏழைகளாகவும் விசேட தேவையுடையோர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களையும் நாம் மறந்து விடமுடியாது
இப் புனித பெருநாளை பூரிப்போடும் உற்சாகமாகவும் கொண்டாடும் நாம் அவர்களுக்கும் எம்மால் முடிந்தவற்றை வழங்கி எல்லோருமாக மிகவும் ஒற்றுமையாகவும் மகிழ்சியாகவும் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்வோம்.
அத்தோடு நமது இலங்கைத் திருநாட்டில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மேலும் வலுப் பெற்று எமது மார்கக் கடமைகளையும் எதுவித தடைகளுமின்றி நிறைவேற்றுவதற்கும் எல்லாம் வல்ல அழ்ழாஹ்வைப் பிராத்திப்போம் அல்ஹம்துலில்லாஹ் !
மேலும் நம் ஈமானிய உறவுகள் அனைவருக்கும் குறிப்பாக என்றும் என்னிதயத்தில் குடி இருக்கும் வறிய அனாதைகள் அங்கவீனர்கள் இளம் விதவைகள் அனைவருக்கும் ஈதுல்அழ்ஹாஹ் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மகிழ்சி அடைகின்றோம் என இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.


Leave a comment