தனது சொந்த சேமிப்பில் ஹஜ்ஜிற்கு வருகை தந்திருக்கும் 85 வயது மூதாட்டி!

85_big[1]– MJ

மக்கா: பாகிஸ்தானிலிருந்து ஹஜ்ஜிற்கு வருகை தந்த ஹாஜிகளுள் 85 வயதானா மூதாட்டிப் பெண்மணி ஆமினா என்பவரும் ஒருவர். இவரது வயதுக்கு, ஹஜ் செய்வதற்கு பல தடைகள் இருந்தும், தனது முயற்சியால் ஹஜ் செய்யும் பாக்கியத்தை இம்முறை பெற்றிருக்கின்றார்.

‘எனது செலவுகள் போக மீதமுள்ள பணத்தை ஓர் கறுப்புப் பெட்டியில் போட்டு சேமித்து வருவேன். ஹஜ் செய்யவேண்டும் என்ற ஹாஜத் எனக்குள் இருந்தது. எனினும் பொருளாதார வசதிகள் போதவில்லை. இதனால் ஓர் சேமிப்பை செய்து வந்தேன்’.

‘தற்பொழுது, இப்பணம் ஓர் ஹஜ் செய்வதற்கு போதுமானதாக இருப்பதையறிந்து ஆச்சரியமடைவதுடன் மகிழ்ச்சியுமடைகிறேன் என்பதாக ஆமினா கூறியுள்ளார்.

இவரது வருகைக்கு சவூதி அரேபியா ஹஜ் அமைச்சகம் அதிக ஆதரவுகள் வழங்கி வருவதுடன், விருந்தோம்பல்களும் இப்பெண்மணிக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

தனது கண்களால் புனித கஃபாவை பார்ப்பதையிட்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக ஆமினா கூறுகிறார்.

வட்டிக்கும், லோனுக்கும், காசோலைக்கும் பிணைநின்று பேருக்கும் புகழுக்கும் செய்து வரும் இன்றைய கால ஹஜ்ஜிற்கு இப்பெண்மணியின் சேமிப்பு நல்லதோர் உதாரணமாக அமைகிறது!

85_big[1]

Published by

Leave a comment