காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நாளை 16.10.2013 புதன்கிழமை சரியாக காலை 6.10 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் செயலாளர் எம்.மிஹ்ழார் தெரிவித்தார்.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வழமையாக ஏற்பாடு செய்து வரும் இந்தத் திடல் தொழுகையில் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் தமாம் இஸ்லாமிய கலாச்சார நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க். முஹம்மது முன்சூர் (மதனி) நிகழ்த்தவுள்ளார்.
தொழுகைக்காக வருபவர்கள் ஒரு தடவை மாத்திரமே ஜமாஅத் நடைபெறும் என்பதால் நேர காலத்துடன் சமுகமளிக்குமாறும் வுழு செய்து கொண்டு தங்களுக்கான (முஸல்லா) பாய் போன்ற விரிப்புக்களை கொண்டு வருமாரும் ஆண் பெண் கலப்பில்லாமல் ஏற்பாடு செய்துள்ள ஒழுங்குகளை பேணி நடக்குமாறும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திடல் தொழுகையில் உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊர்பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment