காபூல்: தனது கொள்கைக்கு எதிரானவர்களை போட்டுத் தள்ளிவிட்டு குகைக்குள் மறைந்துவிடும் போராளிக் குழுக்களின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை ஆப்கானில். புனித ஹஜ் பெருநாளில் ஆப்கானிஸ்தானில் உள்ள லோகார் மாகாணத்தில் இருக்கும் பள்ளிவாயல் ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததில் அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் பலியானார்.
ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் உள்ள புல், ஆலம் பள்ளிவாயல் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இன்று காலை சிறப்பு அமல்கள் நடந்தது. அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் சிறப்புரை நிகழ்த்தவிருந்தபோது அங்கிருந்த மேசைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.
இதில் ஜமால் உடல் சிதறி பலியானார். இந்த சம்பவத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காபூலின் தெற்கில் உள்ள லோகாரின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்களின் பிடியில் உள்ளன.

Leave a comment