நமது நிரூபர்
மினா: இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதக்காக 118 நாடுகளில் இருந்து 1.38 மில்லியன் மக்கள் சவூதி அரேபியா வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் முஹமட் Bபின் னைப் தெரிவித்துள்ளார்.
இதில் 55 சதவீதம் ஆண்களும் 45 சதவீதம் பெண்களும் அடங்குகின்றனர். இம்முறை புனித ஹஜ் கடமைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. 72000 இற்கும் மேற்பட்டோர் கடல் வழியாகவும், 14000 இற்கும் மேற்பட்டோர் தரை வழியாகவும், ஏனையோர் விமானம் மூலமும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment