இனங்களுக்கிடையில் நிலையான ஒற்றுமையும், பரஸ்பரமும், புரிந்துணர்வும் ஏற்பட நாம் எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

hizbullahபழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இனங்களுக்கிடையில் நிலையான ஒற்றுமையும், பரஸ்பரமும், புரிந்துணர்வும் ஏற்பட நாம் எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக என ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் பொருளாதார அபிவித்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அகிலமெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தியாத்திருநாளாம் புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தியாகத்தின் எடுத்துக்காட்டாகவும் முஸ்லிம்களின் வரலாற்று சிறப்புமிக்க பெருநாளாகவும் ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் மாதம் கொண்டாடப்படுகின்றது.

ஹாஜிகள் புனித ஹஜ் கடமையினை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றி வருகின்ற இத்தருணத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் விடிவுக்காகவும், பாதுகாப்புக்காகவும், மார்க்க கடமைகளை, மத அனுஷ்டானங்களை பேணி பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்று நாம் எல்லோரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி நிரந்தர அமைதியாக மாற்றமடைந்து, நமது சமுதாயத்திற்கு எதிராக, மார்க்க கடமைகளுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு இறைவன் நேரான பாதையை காட்டுமாறும், முஸ்லிம் சமுதாயம் தொடர்பாக நல்ல எண்ணங்களை ஆட்சியாளர்களின் உள்ளங்களிலே வழங்க அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக. மனம் மகிழ வல்ல இறைவன் அல்லாஹ்வை பிராத்தித்துக் கொள்வதாகவும் பிரதி அமைச்சர்; ஹிஸ்புழ்ழாஹ் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

 எல்லாம் வல்ல இறைவன் நாம் அனைவருக்கும் சந்தோசத்தினையும் சுபீட்சத்தினையும் தருவானாக. என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment