பேருந்துடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்!

accident-signவந்தாறுமூலை: ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது வந்தாறுமூலை சந்தைப் பகுதியின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி மாவடிவேம்பு கிராம அபிவிருத்திச் சங்க வீதியில் வசிக்கும் எட்டு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் உதயகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரிதிதென்ன போக்குவரத்து சாலைக்குரிய பஸ்ஸானது முன்னோக்கிச் சென்ற போது எதிரே வந்தாறுமூலையில் இருந்து மாவடிவேம்பிலுள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியதால் குறித்த நபர் ஸ்தலத்திலே உயிரிந்துள்ளார்.

இச்சம்பவ இடத்திற்கு சமுகமளித்த பொதுமக்கள் சாரதியை பிடிக்க முற்பட்டபோது சாரதி தப்பியோடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சடலத்தை செங்கலடி வைத்தியாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, குறித்த பஸ்வண்டியை எறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியிலும் தேசமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– VK –

Published by

Leave a comment