சமாதான நீதவான்கள் நியமனம்

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீ.ல.மு.கா முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.மூபீனின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபடும் 5பேருக்கு சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஐவருக்கு சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.மூபீன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் எஸ்.ஐ.யசீர் அறபாத் ஆசிரியர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் டி.எம்.தௌபீக் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது சமாதான நீதவான்கள் எவ்வாறிருக்க வேண்டும், அவர்களின் சேவைகள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment