வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வு நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில் ஆரம்பம்

R m 4ரைஸ்

கிண்ணியா: 2013 ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கிண்ணியா பொது நூலகத்தில் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் ஆரம்பமானது. இம்முறை வாசிப்பு மாத நிகழ்வுகள் 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் பொன்விழாவைக் கண்டுகொண்டிருக்கும் கிண்ணியா பொது நூலகத்தின் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

‘நூலுயர வாசிப்புயரும் வாசிப்புயர வாழ்வுயரும்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை வாசிப்பு மாத நிகழ்ச்சிகள் கோட்ட மட்டத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை வாசிப்பும் சொல்வதெழுதலும், கட்டுரை, கவிதை, அறிவுக்களஞ்சியம் (வினா விடை), மூத்த இலக்கியவாதிகள் கௌரவிப்பு என்பன இம்முறை பொன்விழா வாசிப்பு மாத நிகழ்ச்சிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜம்சித், முகாமைத்துவ உதவியாளர் நிஜாம்தீன், கவிஞர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment