இந்தியா: இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயலொன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதன் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவரும் பைலின் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் நாலரை லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் 1999-இல் வீசிய பெரும் புயல் மழையில் சுமார் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
BBC Tamil
Leave a comment