திவிநெகும வேலைத்திட்ட 5ம் கட்ட நிகழ்வு – காத்தான்குடி

DSCF5905எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: நாடு பூராகவும் இடம்பெற்ற திவிநெகும வேலைத்திட்ட 5ம் கட்ட நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்ப நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் ஏ. சி. அகமட் அப்கர் தலைமையில் 167சி பிரிவில் இடம்பெற்றது பிரதம அதிதியாக நகர சபையின் பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் கலந்து சிறப்பித்தார். 

பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தனதுரையில் தாவரங்கள் நடப்படுவதன் அவசியத்தினையும் அழிக்கப்படுகின்ற காடுகளுக்கு சமாந்தரமாக மரங்களை நட்டு சுத்தமான காற்றினை பெற்றுக்கொள்வது தற்போதய முக்கிய தேவையாக இருப்பதாகவும் தனதுரையில் குறிப்பிட்டார்

மேற்படி நிகழ்வின்போது நகர சபை உறுப்பினர் எம்.ஐ.பாக்கீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. கருணாகரன், நிருவாக உத்தியோகத்தர் கோமலேஸ்வரன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஈ. குணரெட்ணம் கிராம சேவை உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது மரக்கன்றுகள் மற்றும் விதைப்பைக்கற்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment