கொழும்பு: கொரிய வேலைவாய்ப்புக ளைப் பெற்றுச் செல்வதற்கான கொரிய மொழிப் பரீட்சைகள் எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் கொழும்பில் ஆறு நிலையங்களில நடைபெறவுள்ளது. இம்முறை இப்பரீட்சைக்காக 20,536 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சை மோடிசகளில் ஈடுபடுபவர்கள் பதவி அந்தஸ்து பாராமல் தண்டிக்கப்படுவார்கள். செலியூலர் தொலைபேசிகள் உட்பட இலத்திரணியல் கருவிகள் பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.
கொழும்பு நாலந்தா கல்லூரி, கோதமி மகளிர் மகா வித்தியாலயம், அசோக்கா வித்தியாலயம், டி.எஸ். சேனாநாயக்கா வித்தியாலயம், இஸிபத்தன கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி என்பவற்றில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை மண்டபம் மற்றும் சுட்டிலங்கள் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்குரிய பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படும்.
http://www.slbfe.lk அல்லது http://www.eps.go.kr அல்லது http://www.brdkorea.or.kr என்ற இணையத்தளங்களின் ஊடாக பேறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித் துள்ளது.
Leave a comment