கிண்ணியா பைசல் நகரில் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) 5ம் கட்ட நிகழ்வு

DSC06236பழுளுல்லாஹ் பர்ஹான்

கிண்ணியா: திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 5ம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக் கிழமை) இடம்பெற்றது.

இதற்கமைவாக கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பைசல் நகரில் கிண்ணியா பிரதேச செயலாளர் கிருனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற திவிநெகும 5ம் கட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்று விதைகள் வழங்கி வைத்தார்.

இதில் கிண்ணியா நகர பிதா கலாநிதி எம்.எம்.ஹில்மி, திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.குகவதானி ராமேஸ்வரன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முசில் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment