கிண்ணியா: தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கு நுளம்புகளை பரப்பக்கூடிய இடங்களை பரிசோதனை செய்து அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில் கிண்ணியாவின் சகல இடங்களிலும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக கிண்ணியா நகரசபை அலுவலக சுற்றுவட்டத்திலும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ.ஜம்சித் தலைமையில் இன்று காலை நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a comment