முல்லைத்தீவு மக்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

photoபழுளுல்லாஹ் பர்ஹான்

முல்லைத்தீவு: முல்லைத்தீவு கரைந்துறைப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாபிளவு, ஹிஜ்ரா புரம் மீள்குடியேற்ற கிராமங்களைச் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் சிறிலங்காக் கிளை மீன்பிடி வள்ளங்கள், நீரேரி மீன்பிடிப்படகுகள் உட்பட இதர மீன்பிடி உபகரணங்களை அண்மையில் வழங்கியது.

நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், கொம்பிரசர் போன்ற வாழ்வாதார சாதனைங்களையும் அண்மையில் மீள்குடியேறிய மக்களில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு முஸ்லிம் எய்ட் பகிர்ந்தளித்தது. வறிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முஸ்லிம் எய்ட் இன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர், உதவி பிரதேச செயலர், கிராம சேவை அலுவலர் மற்றும் முஸ்லிம் எய்ட் பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்பு வீ ஓ எஸ் டி மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் இந்நிகழ்விற்கான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

photo(3)_1

photo

 

Published by

Leave a comment