பாடசாலை முடிந்தவுடன் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ரியூஷன் வகுப்புக்களுக்கு இழுத்தும் செல்லும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – அரச அதிபர் சார்ல்ஸ்

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறையயில் உள்ள பாடசாலை முடிந்தவுடன் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ரியூஷன் வகுப்புக்களுக்கு இழுத்தும் செல்லும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்தில் சாதiனைகளை நிகழ்த்தி மட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாடசாலை முடிந்தவுடன் பெற்றோர்கள் பிள்ளைகளை வயது வித்தியாசம் பாராது மோட்டார் சைக்கிளில் இழுத்துச் செல்கின்ற நிலை எமது மாவட்டத்தில் காணப்படுகின்றது.

வயதுக்கு மீறிய சுமையையும் உடலுக்கு தேவையற்ற அழுத்தத்தையும் மாணவர்கள் இதனால் எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்வி கல்வி என்பதிலேயே அதி கூடிய அக்கறை காட்டுவதனால் விளையாட்டுத் துறையிலும் பிள்ளைகளை ஈடுபடுத்தாமல் எந்நேரமும் படியுங்கள் ரியூசன் வகுப்புக்களுக்குச் செல்லுங்கள் என பெற்றோர்கள் பிள்ளைகளை வற்புறுத்தி வருகின்றனர்.

விளையாட்டு கல்விக்கு இடையூறு என்று ஒரு போதும் நினைக்கக் கூடாது.ஏனெனில் விளையாட்டுத் துறை கல்வியின் முக்கியத்துவமாகும். பிள்ளைகளுக்கு எந்நேரமும் கல்வி அழுத்தம் திணிக்கப்படாமல் விளையாட்டுத் துறையிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் நீர்கொழும்பு வகுதியினால் பிற்பகல் வேளையில் 04.30மணியளவில் நீர்கொழும்புப் பகுதியால் பிரயாணத்திலே வந்து கொண்டிருந்த போது பிரபல்யமிக்க நீர்கொழும்பு மேரி ஸ்டலா கொலேஜ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி இருந்ததை அவதானித்தேன். இந்த நிலைமை எமது மாவட்டத்தில் எங்கும் காணமுடியாது.

விளையாட்டுத்துறையில் பாடசாலை மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.விளையாட்டுக்கென பாடசாலையில் நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

விளையாட்டுத் துறையினால் கிடைக்கப்பெறும் உடல்பயிற்சி,உடல் ஆரோக்கியத்தின் மூலம் மாணவன் விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதுடன் கல்வியிலும் அவன் சிறப்பாக முன்னேற முடியும்.

அண்மையில் நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத தன் மகனுக்கு தந்தை சூடு வைத்துள்ள மிக மோசமான நிலையை ஊடகங்களினூடாக அறிந்து கொண்டேன்.

கல்வியில் அதி கூடிய வேகமும் மோகமும் கொண்டுள்ளதனாலேயே பெற்றோர்கள் இவ்வாறான காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

எனது பிள்ளைகள் இருவர் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில்தான் கல்வி பயின்றனர். படிக்கின்ற காலப்பகுதியில் கல்வியிலும் விளையாட்டுத்துறையில் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவர்கள்.

தற்போது பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கும் கல்வியில் ஆர்வங்காட்டி சிறப்பாக கல்வி பயில்வதுடன் விளையாட்டுத்துறையிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

ஆகவே, கல்விக்கு விளையாட்டுத்துறையை இடைஞ்சலாக கருதாமல் இரண்டையும் எமது மாணவர்களிடம் வளர்ப்பதோடு ரியூஷன் வகுப்புக்களால் கல்வி அழுத்தத்தை எமது மாணவர்களுக்காமல் சிறப்பான மாணவர் சமூகத்தை உருவாக்க நாம் எல்லோரும் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரரிவித்தார்.

Published by

Leave a comment