காத்தான்குடி: உள்ளுராட்சி வாரம், தேசிய வாசிப்பு மாதம் ஆகிய நிகழ்வுகளினை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் பாடசாலைகள் மற்றும் பொதுநிறுவனங்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. காத்தான்குடி நகரசபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தலைமையில் அன்பளிப்புப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் முபாறக்,நூலக உத்தியோகத்தர்கள்,பாடசாலையின் அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி நகரசபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமினால் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பொது நூலகத்தினால் ‘பதாதைகள் தொங்கவிடல்’ ‘சிரமதான நிகழ்வுகள்’ ‘மரம் நடல்’ ‘கொடி விற்பனை’ ‘விவாதப் போட்டி’ ‘விழிப்புணர்வு கருத்தரங்குகள்’ புத்தகக் கண்காட்சி’ ‘சஞ்சிகை வெளியீடு என பல நிகழ்வுகள் அரங்கேற்றப்படவுள்ளதாக காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் முபாறக் தெரிவித்தார்.

Leave a comment