சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில்

kattankudy-பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் பல வருடங்களாக இடம்பெற்று வரும் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் இம்முறை இடம்பெறும் என புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் செயலாளர் ஏ.ல்.டீன் பைறூஸ் ஜேபி தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்பெருநாள் பஸார் கடைத்தொகுதிகள் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து விடுதி வீதி வரைக்கும் அமைக்கப்பட்டிருக்கும் என்பதுடன் மதியம் 02.00மணி முதல் இரவு 10.00மணி வரை குறித்த கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டிருக்கும் இடம் போக்குவரத்திற்காக பொலிஸாரின் அனுமதியுடன் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வீதிகளினூடாக போக்குவரத்துச் செய்யக் கூடியவர்களுக்கான மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இப்பெருநாள் பஸார் நிகழ்வு பெருநாளைத் தொடர்ந்து மூன்று நாளைக்கு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பஸார் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களை முன்னிட்டு காத்தான்குடியில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றதுடன் கடந்த நோன்புப் பெருநாள் பஸார் காத்தான்குடி ஆற்றங்கரை குபாப் பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment