காதலில் தோல்வியுற்றதால் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மட்டு மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயது இளைஞன் தற்கொலை

iyankeny_sucide_man_004[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த தொடறூந்தில் பாய்ந்து மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த விஜி சிரான் (வயது 20) தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விஜி என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் புதல்வனான இவர் இன்று அதிகாலை 04.45மணியளவில் மட்டக்களப்பில் வைத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் தண்டவாளத்தில் தலைப்பகுதியை வைத்தே இவர் தற்கொலை செய்துள்ளார்.

காதலில் தோல்வியடைந்ததினாலேயே இவர் தற்கொலை செய்துள்ளார் என தெரிய வருகிறது.

இவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment