திருகோணமலை: நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தொடர் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் அபிவிருத்திகள் சம்பந்தமான பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி சம்பந்தமான உரையினை வேண்டுகோளாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்வைத்தார்.
நகரபிதா தொடர்ந்தும் நிவர்த்தி செய்யாமல் குறைபாடாக இருக்கும் இரண்டு விடயங்களை முன்வைத்தார். அவர் குறிப்பிடும்போது ‘ஆர்.டி.டி இற்கு உட்பட்ட மக்கள் வங்கி வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி சம்பந்தமாக ஆர்.டி.டி இற்கு தொடர்ச்சியாக கேட்கப்பட்டது. கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சின் வீட்டுக்கு பின்னாலுள்ள. இந்த வீதி கட்டாயம் செய்யவேண்டியுள்ளது.
அடுத்ததாக குறுகிய காலத்திற்குள் அமைக்கப்பட்டு தற்போது பழுதடைந்து உடைந்து விழும் நிலையிலும், வீதி விபத்துக்கள் ஏற்படும் நிலையிலும் உள்ள கட்டையாறு பாலம் இவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டும் கூட செய்யப்படாமல் உள்ளது.
நாடுபூராகவும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்’ அவர்களின் தலைமையில் மஹிந்த சிந்தனை திட்டத்தின் மூலமாக பெரிய பெரிய பாலங்கள், வீதிகள் என அபிவிருத்திகள் செய்யப்பட்டும் கூட கிண்ணியாவின் இந்த விடயங்கள் புரக்கணிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவரவர்கள் அவர்களின் பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரசில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் கூட கண்டுகொள்ளவில்லை.
இவ்வாரான அபிவிருத்தி விடயத்தை இந்த அபிவிருத்தி கூட்டத்தைத்தவிர வேறு எங்கும் பேச முடியாது. இவற்றை ஏதாவது ஒரு நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவோ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமாகவோ இவற்றை செய்து தரும்படி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரிம் கேட்டுக்கொள்கிறேன்’ என கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் உரையினை வேண்டுகோளாக முன்வைத்தார்.



Leave a comment