காத்தான்குடி பொதுச்சந்தையில் டெங்கு ஒழிப்பு பரிசோதனை

market– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சுகாதார அமைச்சினால் ஓக்டோபர் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொது இடங்கள்,பொதுச் சந்தைகள்,பஸ் டிப்போக்கள்,வங்கிகள்,உணவகங்கள்,பாடசாலைகள், வைத்தியசாலைகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் ஆகியோர் பரிசோதனை செய்யப்பட்டு அவற்றில் டெங்கு பரவாதவாறு எவ்வாறு சூழலை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் விளக்கமளிக்கப்பட்டும் வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடி பஸ் டிப்போ பரிசோதனை செய்யப்பட்டு ஆட்கொல்லி டெங்கு பரவாதவாறு சூழலை வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு எதிர்வரும் 10ம் திகதி வியாழக்கிழமை பஸ் டிப்போ ஊழியர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பாரிய சிரமதானமொன்றை காத்தான்குடி பஸ் டிப்போவில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை காத்தான்குடி முதலாம் குறிச்சி சந்தை,காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மார்க்கட்டுகளில் வடிகாண்கள், மீன் வெட்டும் இடங்கள், நுளம்புக் குடம்பிகள் பரவும் இடங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கும் இது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டும் இனிவரும் காலம் கிழக்கில் மழை காலமாக உள்ளதாலும் காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment