யாழ். புடவைக்கடைகளில் பாரிய தீ விபத்து!

shopயாழ்ப்பாணம்: யாழ்.மின்சார வீதியிலுள்ள புடைவை கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் இன்று இரவு இலங்கை நேரம் சுமார் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு முஸ்லீம் வியாபாரியின் வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டு பின்னர் அது ஏனைய இடங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எத்தனை கடைகள் எரிந்து நாசமாகின என்ற விபரங்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரத்திற்கு வராத போதும் பொது மக்கள் மிகவும் கஸ்ரப்பட்டு ஏனைய இடங்களுக்கும் பரவாமல் தடுத்துள்ளனர். தற்போதும் தீயணைப்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. Tw

shop

Published by

Leave a comment