கொழும்பு: அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் இன்று கொழும்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரான ஜே.டி. திலக்கசிரி என்றழைக்கப்படும் ஹட் திலக்கசிரி என்பவரும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் கொழும்பு டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் வைத்து இன்று மதியம் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் பயணித்த ஜீப் அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஜீப்பின் திறப்பு வீதியில் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கையடக்க தொலைபேசிகள் இரண்டு மற்றும் பாதணிகள் இரண்டும் அவர்களின் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். Tw
Leave a comment