கரப்பந்தாட்ட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

volley ballகொழும்பு: தேசிய கரப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள ஆசிய கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு பிரதான பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், உடற்பயிற்சி பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், பத்தாவது ஆசிய இளைஞர் ஆண், பெண் அணி உட்பட பதினேழாவது ஆசிய கனிஷ்ட ஆண், பெண் அணியினருக்கான பயிற்சியாளர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்பதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Published by

Leave a comment