உலகம் இன்று ஒரு சர்வதேச தொலைத் தொடர்பு வலை யமைப்புக்குள் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் அஞ் சல் சேவை என்பது மிக மிக அத்தியாவசியமானதும் அவ சியமானதுமாக இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலுமுள்ளதும் சர்வதேச ரீதியாகவும் செயற்படுகின்ற பாதுகாப்புப் படையினரின் தொலைத் தொடர்பு வசதிகளுக்கு மட்டுமே வானொலி தொடர்பு சேவை அன்று இருந்து வந்துள்ளது. ஏனைய சகல மக்களுக்குமான பிரதான தொடர்பு சாதனமாக அஞ்சல் சேவையே இருந்து வந்துள்ளன.
அஞ்சல் சேவையானது புராண காவியகாலங்களில் புறாவை பண்டைய அரசர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடுத்ததாக அரசர்கள் தூதுவர்களை அனுப்பி செய்தி பரிமாற்றங்களை செய்து கொண்டார்கள்.
எமது நாட்டைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தபால் சேவகர்கள் என்ற ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டதாக தெரிய வருகின்றது. அக்காலத்தில் தபால் சேவகர்கள் நடந்து சென்றே செய்திகளை கடிதங்கள் வாயிலாக கொடுத்து வந்துள்ளனர். இன்றும் அரும் பெருட்காட்சியகத்தில் பிரிட்டிஸ் மகாராணியின் கிரீடம் அணிந்த முகத்துடன் கூடிய தபால் முத்திரைகளை பார்க்க முடியும். அன்று அந்த முத்திரையில் சிலோன் என்றும் தபால் தலைப்பின் விலை 1 சதம் அல்லது 2 சதம் என்றும் உள்ளது.
இன்று தொலைத்தொடர்பின் வளர்ச்சி வேக அதிகரிப்பு காரணமாக அதிலும் கைத்தொலைபேசி, கணனிகள் வருகையால் அஞ்சல் சேவையின் மகத்துவம் அவசியம் குறைந்துள்ளது என்றே சொல்ல முடியும். ஆனால் தபால் சேவையின் தரம் குறைந்துள்ளது என எவரும் சொல்ல முடியாது. சட்டப்படியான வங்கிகள், அரச அதிதியாவசிய எழுத்து மூல ஆவணங்கள் யாவும் தபாலில் சேர்க்கப்பட்டு தபால் ஊழியர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
– தினகரன்

Leave a comment