மிஸ்வாக் பாவனையில் விரல்களின் பங்களிப்பும் அராக் குச்சியின் சிறப்பும்
சென்ற வாரத் தொடரில் அராக் எனும் குச்சி பற்றி பல் வைத்தியத் துறையின் ஆய்வையும் அராக் குச்சி தற்கால பல் வைத்தியத் துறைக்கு எந்தளவு ஒத்துப் போகின்றது அதில் பொதிந்துள்ள விஞ்ஞான ரீதியான பதார்த்தங்கள் என்ன என்பவற்றை பற்றிய சிறிய ஓர் ஆய்வைப் பார்த்தோம். இவ்வாரம் அராக் குச்சி பற்றி ஷரீஆ வின் கண்ணோட்டம் என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
மிஸ்வாக் செய்யும் போது அராக் எனும் குச்சியையே பயன்படுத்துவது உசிதமானதாகும். இருந்தாலும் வேறு குச்சிகளின் மூலம் செய்தாலும் மிஸ்வாக் உண்டாகும்.ஆனால் நிபந்தனை-பயன்படுத்த்ப்படும் குச்சி வாயில் ஏற்பட்ட துர்வாடையை அல்லது மஞ்சற் தன்மையை அல்லது மாற்றத்தை நீக்கக் கூடியதாக அமைவதோடு முரசையும் வாயையும் காயப்படுத்தாததாக அமைந்திருக்க வேண்டும்.
இமாம் நஸ்ர் அல்மக்தஸி அவர்கள் கூறுகின்றார்கள் மிஸ்வாக் பாவனையில் அராக் குச்சி முதலிடம் வகிக்கின்றது. அது அல்லாத பட்சத்தில் ஈச்ச நார்களின் மூலம் மிஸ்வாக் செய்வது வரவேற்கத்தக்கதாகும். என்றாலும் அராக் குச்சி நல்ல நறுமணமும்இஇரசாயண பதார்த்தங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அதுவே மேலாதனாகும். இதனையே ரசூல்(ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.
ஹஸ்ரத் அபூகைநதஸ் சபாகி (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் நான் அப்தில் கைஸ் அவர்களுடைய தூதுக் குழுவில் இருந்தேன்.அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அராக் குச்சியை எடுத்து இதனால் மிஸ்வாக் செய்து உங்களது வாயைத் துப்பரவு செய்யுங்கள் எனக் கூறினார்கள் (அல் மஜ்மூஉ ஷரகுல் முகத்தப்)
மிஸ்வாக் பாவனையில் அராக் குச்சியே மிக உசிதமானதாகும்.இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்வதற்காக நான் அராக் எனும் குச்சியைத் தயார் செய்து கொடுத்தேன் (இப்னு ஹிப்பான்)
மேலும் உலமாக்கள் கூறுகின்றனர் அராக் குச்சி முரசுகளைக் கெட்டிப்படுத்துவதுடன் உணவுச் சமிபாட்டிற்கு உதவுவதுடன் இலகுவாக சிறுநீர் கழிப்பதற்கும் வழிகோருகின்றது. ஆகவே மிஸ்வாக் பாவனையில் பல குச்சிகளும்இதூரிகைகளும் இருந்தாலும் கூட அராக் குச்சியே மிகப் பொருத்தமானதாகும்.
விரல்களின் மூலம் மிஸ்வாக்
மிஸ்வாக் பாவனைக்காக அராக் குச்சியோ அல்லது வேறு ஏதாவது குச்சிகளோ இல்லாத பட்சத்தில் ஒருவர் தனது விரல்களின் மூலம் மிஸ்வாக் செய்ய முடியும். ஆனால் சில நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்
1. பயன்படுத்தப்படும் விரல் சொரசொரப்பான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்
2. உயிருள்ள ஒருவருடைய உடலுடன் இணைந்ததாக இருக்க வேண்டும்
3. பிரித்தெடுக்கப்பட்ட ழச வெட்டப்பட்ட விரல்களைக் கொண்டு மிஸ்வாக் செய்ய முடியாது
விரல்களின் மூலம் மிஸ்வாக் செய்ய என்பதற்கும் பல ஹதீஸ்கள் கூறப்பட்டுள்ளன. ஹஸரத் அலி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தனது வாயினுள் விரல்களை விட்டு மிஸ்வாக் செய்தார்கள் எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் – அஹ்மத்)
எனவே ஒரு மனிதனது எண்ணத்திற்கேற்ப விரல்களின் மூலம் மிஸ்வாக் செய்தாலும் வாய் சுத்தமாவதுடன் மிஸ்வாக்கிக்கென்று சொல்லப்பட்ட கிடைக்கும் என்பது உலமாக்களது கருத்தாகும்…
(தொடரும்)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்

Leave a comment